×

பெல் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்துவேன் காங்.வேட்பாளர் திருநாவுக்கரசர் தேர்தல் பிரசாரம்


திருவெறும்பூர், ஏப்.12:  பெல் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வாக்குறுதி அளித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான திருநாவுக்கரசர் பெல் தொழிலாளர்களிடம் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையொட்டி நடந்த வாயிற் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு தலைமை வகித்தார். எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ சேகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க பிரச்னைகளை தீர்ப்பது சாதாரண காரியம் கிடையாது. தற்போது பெல் நிறுவனத்தில் உற்பத்தி குறைவு, ஊழியர்கள் குறைப்பு என பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உற்பத்தியை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்காக பிரதமர் வரை சென்று முறையிடுவேன்.

ஆயிரக்கணக்காக உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வற்புறுத்துவேன்.  விவசாயம் நலிந்து வருவதால் அதில் ஆர்வம் குறைந்து வருகிறது. விவசாயத்தின் மூலம் வரும் பொருட்களை கொண்டும் சிறு குறு தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். அதனால்தான் ராகுல் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் எந்தவித லைசென்சும் தேவையில்லை என அறிவித்துள்ளார். நவீன காலத்திற்கு தேவையான அனைத்தையும் புதிய உத்தியாக செயல்படுத்த உதவுங்கள். ராகுல் பிரதமராக வரவேண்டும். இங்கு தொழில் தொடங்குவதற்கு கட்டுமான வசதிகள் உள்ளது. தற்போது உங்கள் முன்பு வேட்பாளராக நிற்கிறேன். ஒத்துழைப்பு தாருங்கள். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் வரும் என்று கூறினார்.பெல் தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளர் தீபன் மற்றும் கூட்டணி கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் துவாக்குடி மற்றும் பெல் ஊரகப் பகுதியில் சென்று வாக்கு சேகரித்தார்.

Tags : contract workers ,Bell ,Congregation Thirunavukarajar ,
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...